அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலையா? கண்களை பாதுகாக்க இவற்றை செய்யுங்கள்!

Advertisement

லேப் டாப், மொபைல்போன் இவை தவிர்க்கமுடியாதபடி நம் வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இவை எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு கடும் கேட்டையும் விளைவிக்கின்றன. தொடர்ந்து பல மணி நேரம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்போனை பார்ப்பது கண்களையும் பார்வை திறனையும் பாதிக்கும். மொபைல்போனிலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளி, காலப்போக்கில் பார்வையிழப்பை ஏற்படுத்தும். சில வழக்கங்களை கடைபிடித்தால் கண்களை பாதுகாக்க முடியும்.

உள்ளங்கை வைத்தியம்
இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசவும். கைகளை தொடர்ந்து சில நொடிகள் உரசினால் சூடுண்டாகும். கண்களை மூடிக்கொண்டு சூடான உள்ளங்கைகளை இமைகளின்மேல் வைக்கவும். இப்படி 5 முதல் 7 முறை செய்யலாம்.

கண்களை சுழற்றுதல்
கண்களை கடிகாரம் சுற்றும் திசையில் சுழற்றுங்கள். சிறிது ஓய்வு எடுத்த பிறகு எதிர் திசையில் சுழற்றுங்கள். தினமும் இப்படி செய்தால் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள் தசைகள் வேறு திசையில் அசைவுறும்.

கவனத்தை மாற்றுதல்
தொடர்ந்து இடைவிடாமல் லேப்டாப்பை பார்த்துக் கொண்டிராமல் பார்வையை விலக்கி தொலைவில் இருக்கும் ஒரு பொருளை பாருங்கள். பிறகு உள்ளங்கையை பாருங்கள். மீண்டும் தொலைவில் உள்ள அதே பொருளை பார்க்கவும். 4 அல்லது 5 முறை இப்படி செய்யவும்.

கண் சிமிட்டுதல்
கண்ணை சிமிட்டுவது இயல்பு. ஆனால் அதைப் பயிற்சியாக செய்ய வேண்டும். வெற்று சுவரின் முன்பு நிற்கவும். 2 நொடிகளுக்கு கண்களை மூடவும். பின்பு கண்களை 5 நொடி நேரத்துக்கு சிமிட்டவும். இப்படி 5 முறை செய்யவும்.

20 - 20 - 20 விதி
கம்ப்யூட்டரில் வேலை செய்தால் அல்லது மொபைல்போனை பார்த்தால் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வையை விலக்கி 20 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடி பார்க்கவும்.

உணவு
கண்களை பாதுகாப்பதற்கு மஞ்சள் மற்றும் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும். பூசணி, கீரைகள், காரட், முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை வள்ளி என்னும் சீனிக்கிழங்கு ஆகியவை கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவாகும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>