ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு உதவும்... இதய நோயை தடுக்கும்: நிலக்கடலையை எப்போது, எப்படி சாப்பிடலாம்?

by SAM ASIR, Jan 13, 2021, 18:36 PM IST

நிலக்கடலை அனைவராலும் விரும்பப்படுவது என்றே கூறலாம். வறுத்த நிலக்கடலையை பலரும் விரும்பி சாப்பிடுவர். அதுவும் குளிர்நிலவும் பருவத்தில் சூடாக வறுத்த கடலை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வறுத்த கடலையை சாப்பிட ஆரம்பித்தால் நிறுத்தால் சாப்பிட்டுக்கொண்டே இருப்பர் பலர். கடலை சாப்பிடுவது நல்லதுதான். அதை எப்பொழுது சாப்பிடலாம்; எப்படி சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்வது முக்கியம்.

எவ்வளவு சாப்பிடலாம்?
ஒரு நாளைக்கு ஒரு கை நிறைய நிலக்கடலை சாப்பிடலாம். இரண்டு சாப்பாட்டு வேளைகளுக்கு இடையில் பசியை தாங்குவதற்கும் கடலை சாப்பிடலாம். அதுவே நிலக்கடலை வெண்ணெய் (peanut butter) என்றால் ஒன்றரை மேசைக்கரண்டி அளவு சாப்பிடலாம்.

எப்போது சாப்பிடலாம்?
பெரும்பாலும் மாலை வேளையில் நிலக்கடலையை சாப்பிடுவது வழக்கம். மாலைப்பொழுதில் மற்ற சிற்றுண்டிகளோடு சேர்த்து இதையும் சாப்பிடுவர். ஆனால், நிலக்கடலையை சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற நேரம் காலைப்பொழுது அல்லது பகல் நேரமாகும். பிற்பகலிலும் சாப்பிடலாம். ஆனால், இரவு உணவின்போது அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்பு நிலக்கடலையை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

நிலக்கடலையிலுள்ள சத்துகள்
100 கிராம் நிலக்கடலையில் 567 எரிசக்தி (கலோரி), 7 சதவீதம் நீர், 25.8 கிராம் புரதம், 16.1 கிராம் கார்போஹைடிரேடு, 4.7 கிராம் சர்க்கரை, 8.5 கிராம் நார்ச்சத்து, 6.28 கிராம் பூரித கொழுப்பு, 24.43 கிராம் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, 15.56 கிராம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு 15.56 கிராம் உள்ளிட மொத்தத்தில் 49.2 கிராம் கொழுப்பு உள்ளது.

நிலக்கடலையின் ஆரோக்கிய பயன்கள்
நிலக்கடலை பசியைக் கட்டுப்படுத்தக்கூடியது. ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்புவோர் தாரளமாக நிலக்கடலை சாப்பிடலாம். ஆனால், அளவுக்கதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். நிலக்கடலையுடன் கலோரி மிகவும் குறைந்த உணவுகளை இணைத்து சாப்பிடலாம். நிலக்கடலையில் பயோட்டின், ஃபோலேட், நியாசின், வைட்டமின் இ, மாங்கனீசு, மெக்னீசியம் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. பயோட்டின் கர்ப்ப காலத்தில் அதிகம் தேவையானது. நிலக்கடலையில் ஃபோலேட் என்னும் வைட்டமின் பி9சத்து இருப்பதால் அதை தொடர்ந்து உண்ணும் பெண்களுக்கு குழந்தைப் பேற்றில் தடை நேராத வண்ணம் கர்ப்பப்பை நன்றாக செயல்படும்.

கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய கோளாறுகளை நிலக்கடலை தடுக்கிறது. நியாசின் என்பது வைட்டமின் பி3 ஆகும். இது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு உதவும். இதய நோய் ஏற்படும் அபாயத்தை வைட்டமின் பி3 குறைக்கிறது. வைட்டமின் இ செயல்திறன் மிகுந்த ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்) ஆகும். நிலக்கடலை தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது. நிலக்கடலையை உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நிலக்கடலையை பொரித்து சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். வறுத்த நிலக்கடலையை சாப்பிடலாம். ஆனால், வறுக்கும்போது உப்பு சேர்ப்பதை தவிர்க்கவேண்டும். உடல் எடையை பராமரிக்க விரும்புகிறவர்கள், சர்க்கரை சேர்த்த நிலக்கடலை பண்டங்களை தவிர்க்கலாம்.

நிலக்கடலை பால்
தேவையானவை: நிலக்கடலை - 2 கைப்பிடி அளவு; ஆப்பிள் அல்லது சப்போட்டா அல்லது நேந்திரம் அல்லது செவ்வாழை அல்லது பேரீச்சை பழங்கள் - தேவையான அளவு, துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி; தேன் - 2 தேக்கரண்டி
செய்முறை: நிலக்கடலையை 8 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். விரும்பும் பழத்துடன் தேங்காய் துருவல், தேனும் தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் (blunder) அடிக்கவும். இதை வடிகட்டி அல்லது வடிகட்டாமல் பருகலாம்.

You'r reading ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு உதவும்... இதய நோயை தடுக்கும்: நிலக்கடலையை எப்போது, எப்படி சாப்பிடலாம்? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை