திருமணமா, நடிப்பா?அனுஷ்கா புதிய திட்டம்..

by Chandru, Jan 13, 2021, 18:42 PM IST

ருத்ரமா தேவி, பாகுபலி, பாகமதி போன்ற படங்களில் பிரதான வேடங்கள் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அனுஷ்கா. பிரபாஸுக்கும் இவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல் கிசுகிசு நிலவி வருகிறது. ஆனால் இருவரும் நண்பர்களாக மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர். இரண்டு குடும்பத்தினரும் வேறு வரன்களுடன் இவர்களது திருமணம் நடத்த முயன்றாலும் இருவரும் அதற்கு சம்மதிக்காமல் தள்ளிப்போட்டு வருகின்றனர். பாகுபலி, பாகமதி படத்துக்கு பிறகு ஒரு வருடத்துக்கும் மேலாக அனுஷ்கா நடிக்காமல் இருந்தார்.

உடல் எடை குறைப்பதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு சைலன்ஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் கொரோனா ஊரடங்கில் சிக்கிக்கொண்டதால் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. ஒடிடி தளத்தில் வெளியானது. அனுஷ்காவுக்கு 39 வயது ஆகிறது. தொடர்ந்து படங்களில் நடிப்பாரா அல்லது குடும்பத்தினர் கூறுவது போல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவரா என்ற ஊசலாட்டம் நிலவி வருகிறது. அனுஷ்கா மீண்டும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். தமிழ், தெலுங்கு மொழியில் நடிக்க பேச்சு நடத்தி வருகிறார் என்று தெரிகிறது.

ஏற்கனவே பி.மகேஷ் இயக்கத்தில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற படத்தில் நடிக்க பேச்சு நடந்த நிலையில் பின்னர் அது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் நடிப்பது பற்றி அனுஷ்கா பரிசீலித்து வருகிறாராம். கொரோனா ஊரடங்கில் வெளியில் தலைகாட்டாமல் இருந்த அனுஷ்கா நேற்று ஐதராபாத் விமான நிலையம் வந்தார். அவரை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீண்டும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி அவர் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

You'r reading திருமணமா, நடிப்பா?அனுஷ்கா புதிய திட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை