உயர் இரத்த அழுத்தம் தான் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பலர் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாகும்.
இந்த கோடை கால பழமான தர்பூசணி ஒரு சுவையான பழம் மட்டும் கிடையாது. இதில் நிறைய விட்டமின் சி, ஏ, பொட்டாசியம், அமினோ அமிலங்கள், லைகோபீன், சோடியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகியவை காணப்படுகிறது. இது நம்முடைய உயர் இரத்த நிர்வகிக்க உதவுகிறது.
கிவி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவையும் நம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இந்த புத்துணர்ச்சி ஊட்டும் பழம் கேக், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்டுகள் போன்றவற்றுடன் பயன்படுத்தப்படுகிறது. இதில் அந்தோசயினின்கள் (ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவை), வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
மாம்பழம் இந்த கோடை காலத்திற்கு ஒரு சுவையான பழமாகும். ஏனெனில் மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் சிறந்த மூலமாக காணப்படுகிறது. இவையும் நம் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.