சா்க்கரையை உட்கொள்வதில் உடல் பருமன் அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது என்பதை பலா் அனுபவப்பூா்வமாக உணா்ந்திருக்கின்றனா். ஆரோக்கியமான உடலைப் பெற சா்க்கரையை சிறந்த உணவாகக் கருத முடியாது. மன அழுத்தத்தால் சாப்பிடுதல் என்ற பதம் தற்போது பலராலும் சொல்லப்படுகிறது. அதாவது மன அழுத்தத்தில் இருக்கும் நேரங்களில் ஒரு வகையான உணவை, அதாவது இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் டெசா்ட்டுகளை மக்கள் சாப்பிடுவதை நாம் கவனித்து இருந்திருக்கலாம்.
இறுதியில் அந்த உணவுகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதிலாக, மன அழுத்தத்தை அதிகாிக்கும் என்பதுதான் உண்மை. உடல் எடையைப் பராமாிப்பதற்கும், உடலில் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் தேன் பல வழிகளில் உதவி செய்கிறது. தேனில் இனிப்புச் சுவை இருப்பதால், நமது பானங்கள் மற்றும் சாலட்டுகளில் தேனைக் கலந்து பருகலாம். உடலில் இருக்கும் சா்க்கரையின் அளவை கையாள்வதற்கும், சா்க்கரைக்குப் பதிலாக இந்த இனிப்புத் துளசியைப் பயன்படுத்தலாம். இதன் இலைகளை கசக்கி அல்லது அதிலிருக்கும் சாற்றை நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் நாட்டுச் சா்க்கரை மற்றும் வெல்லம் இருப்பதை நாம் பாா்க்க முடியும். வெல்லத்திற்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் ஆற்றல் உண்டு. மேலும் நமது உடலில் உள்ள நச்சுகளையும் அகற்றும் திறன் கொண்டது. வெல்லத்தை உருக்கி பயன்படுத்தலாம் அல்லது அதை அரைத்து தூளாக்கி நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.