குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிவப்பிறைச்சியை தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது பார்ப்போம். தற்சமயம் நிகழ்த்திய ஆய்வில் சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளது. தனியார் பத்திரிக்கை ஆய்விற்காக 20 ஆண்டுகளுக்கு முன் 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர்.
அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சிகளான மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் எவ்வளவு சாப்பிடுகின்றனர் என்பதை ஆராய்ந்தது. பெண்களிடம் அதுகுறித்த விவரங்கள் சேமிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக உண்ணும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கூடுதலாக எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகரிக்கிறது. இறைச்சியின் காரணமாக பெண்களின் ஹார்மோன் அளவையும் உயர்த்த கூடும். மேலும் பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சியில் நைட்ரேட்டுகள் உள்ளன. அவை மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.
அமெரிக்க புற்றுநோய் தடுப்பு சங்கமானது சிவப்பு இறைச்சியை அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்டவை என்பதால் குறைவாக பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது. அல்லது அதற்கு பதிலாக மீன் அல்லது கோழி போன்ற புரத உணவுகளை தேர்வு செய்ய சொல்கிறது. சிவப்பு இறைச்சிக்கு பதிலான சில மாற்று உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே முடிந்த அளவு பெண்கள் சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்.