கொரோனா பரவல் காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்காக வைட்டமின் சி சத்து அடங்கிய உணவு பொருள்களை சாப்பிடும்படி அநேகர் கூறுகின்றனர். வைட்டமின் சி சத்தினை போன்றே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து துத்தநாகம் (ஸிங்க்) ஆகும். நம் உடலில் 300க்கும் மேற்பட்ட நொதிகள் (என்சைம்) செயல்படுவதற்கு இந்தத் தாது அவசியமாயிருக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன் செல் பிரிதல், செல் வளர்ச்சி, காயம் குணமாகுதல் ஆகியவற்றுக்கும் இது உதவுகிறது. துத்தநாகத்தை (ஸிங்க்) நம் உடல் சேமித்து வைக்க இயலாது. ஆகவே, தினமும் போதுமான அளவு ஸிங்க் அடங்கிய உணவு பொருள்களை சாப்பிடுவது முக்கியம்.
உடலுக்கு மிகவும் அவசியமான நுண்ணூட்டச் சத்தான துத்தநாகம், பல சிறுபிள்ளைகள், பதின்பருவத்தினர், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உடலில் குறைவாகவே காணப்படுகிறது. முழு வளர்ச்சியடைந்த ஆண் ஒருவர், ஒரு நாளைக்கு 11 மில்லி கிராமும், பெண்கள் 8 மில்லி கிராமும் கர்ப்பிணிகள் 11 மில்லி கிராமும், பாலூட்டும் தாய்மார் 12 மில்லி கிராமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சி
விலங்குள் மற்றும் கோழி இவற்றின் இறைச்சியில் துத்தநாகம் (ஸிங்க்) அதிகமாக அடங்கியுள்ளது. இவற்றில் வைட்டமின் பி12 மற்றும் புரதமும் காணப்படுகிறது. இவை நரம்பியல் மண்டலத்தை ஆரோக்கியமாக காப்பதுடன், செல்களை மறு உருவாக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆனாலும் விலங்குகளின் இறைச்சியில் கொலஸ்ட்ரால், கொழுப்பு ஆகியவை அதிகம் இருக்குமாதலால் மிதமான அளவே சாப்பிட வேண்டும். உடலில் துத்தநாகம் அதிகமாக சேர வேண்டுமானால் தினமும் 1 முட்டை சாப்பிட வேண்டும். சமைக்காத 100 கிராம் ஆட்டிறைச்சியில் 4.8 மில்லி கிராமும், 85 கிராம் கோழி இறைச்சியில் 2.4 மில்லி கிராமும் துத்தநாகம் காணப்படுகிறது.
தானியங்கள்
பட்டாணி, கொண்டை கடலை, பீன்ஸ், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, புளி போன்ற தாவரங்கள் ஸிங்க் அடங்கியவை. இவற்றில் புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து, செம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
160 கிராம் கொண்டை கடலையில் 2.5 மில்லி கிராம் துத்தநாகமும், 100 கிராம் லெகியூம் வகை (பட்டாணி, கொண்டை கடலை, பீன்ஸ், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, புளி)தாயிங்களில் 4.7 மில்லி கிராம் முதல் 1.27 கிராம் ஸிங்க் உள்ளது.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் மற்றும் முந்திரி பருப்புகளில் அதிக அளவு ஸிங்க் காணப்படுகிறது. துத்தநாகத்துடன் இரும்பு, மெக்னீசியம், செம்பு, வைட்டமின்கள் கே, ஏ மற்றும் பி9 (ஃபோலேட்) ஆகியவை உள்ளன. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.
28 கிராம் பூசணி விதைகளில் 2.2 மில்லி கிராமும், 28 கிராம் முந்திரியில் 1.6 மில்லி கிராம் துத்தநாகமும் உள்ளது.
டார்க் சாக்லேட்
டார்க் சார்லேட்டில் அதிக அளவு கொகோ உள்ளது. இதில் துத்தநகாம் மற்றும் ஃப்ளேவனால் ஆகியவை அடங்கியுள்ளன. கொகோ இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதோடு, இரத்த ஓட்டத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. ஒருநாளைக்கு 28 கிராமுக்கும் அதிகமான அளவு டார்க் சாக்லேட்டுகளை தவிரிக்கவும்.
சிப்பிகள்
விலங்குலத்தை சேர்த்தவற்றின் உடலில் அதிக அளவு துத்தநாகம் உள்ளது. ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் துத்தநாகத்தில் பாதியளவு ஒரு சிப்பியில் இருக்கும். வைட்டமின்கள் பி12, செலினியம் ஆகியவற்றில் இது உள்ளது. நண்டு, லோப்ஸ்டர் போன்றவற்றிலும் இது உள்ளது.