சர்க்கரை நோயா?அதியமான் தந்த நெல்லியே போதும்...

சர்க்கரை நோய்க்கு நெல்லிக்காய்

Sep 13, 2018, 17:32 PM IST

என்னப்பா நல்லா  இருக்கியா? எங்கப்பா சர்க்கரை நோய் என் உயிர வாங்கிட்டு இருக்கு. என்ன பண்ணாலும் சர்க்கரை குறையவே மாட்டேங்குது. இப்படி நிறை பேர் சொல்லி கேட்டிருப்பீங்க.

அவன்அவன் பிரச்சனை அவனுக்கு வந்தாதான் தெரியும்னு சொல்லுவாங்க அதுபோல சர்க்கரை நோயாளிக்குதான் தெரியும் சர்க்கரை அளவை குறைக்கிறது எவ்ளோ கஷ்டம்னு. இனி கவலை வேண்டாம். நான் இங்க சொல்ற டிப்ஸ் பண்ணாலே போதும் கண்டிப்பா உங்க சர்க்கரை அளவு குறையும்.

சரி, எப்படி செய்றதுனு பார்போம்.

  • நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி அல்லது முழு நெல்லிக்காய் என்றும் சொல்லப்படும்) துவர்ப்பு சுவை கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும்.
  •  
  • கத்திக்கொண்டு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  •  
  • கறிவேப்பில்லை பத்திலிருந்து பதினைந்து இலை கழுவி அதோடு சேர்க்கவும்.
  •  
  • இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு ஒரு டம்ளர் குடிநீர் சேர்த்து அரைக்கவும்.
  •  
  • தேநீர் வடிகட்டியால் வடிகட்டவும். இத்துடன் பத்து சொட்டுகள் எலுமிச்சை சாறு விடவும்.
  •  
  • ஒரு கரண்டி (பத்து மில்லி ) தேன் சேர்த்து கலக்கவும்.
  •  
  • காலை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் மெதுவாய் சப்பி சப்பி அருந்தவும்.
  •  
  • சாப்பிட ஆரம்பிபதற்கு முன் சர்க்கரை அளவை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்.
  •  
  • ஒரு மாதம் கழித்து திரும்பவும் சர்க்கரை அளவை சோதிக்கவும். சர்க்கரை நிச்சயம் குறையும்.

You'r reading சர்க்கரை நோயா?அதியமான் தந்த நெல்லியே போதும்... Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை