சர்ஜிகல் ஸ்டிரைக் கடந்த 2016 ம் ஆண்டு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலை சர்ஜிகல் ஸ்டிரைக் என்பர். இதைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்து.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில்வெறும் ஆயுதங்கள் மட்டுமல்லாது, நாய்களின் மோப்ப சக்தியில் இருந்து தப்பிக்க சிறுத்தையின் நீரையும் பயன்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் உள்ள கிராமத்தில், இந்திய இராணுவ வீரர்கள் செல்லும் போது அங்குள்ள நாய்கள் குரைத்து மக்களை எழுப்பிவிடுகின்றன.
அதே சமயம் நாய்களுக்கு சிறுத்தை என்றால் பயம். எனவே சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் சிறுத்தையின் சிறுநீரையும் எடுத்து சென்றுள்ளார்கள்.
இந்த வாசனையால், நாய்கள் ராணுவ வீரர்கள் உள்ள பக்கமே வரவில்லையாம். சிறுத்தை என்று பயந்து அவைகள் இருந்த இடத்திலேயே பதுங்கி கொண்டன என இராணுவ அதிகாரி நிம்போர்கார் தெரிவித்தார்.
இதன் மூலம் 2016ம் ஆண்டு செப்டம்பர் 28-29 தேயில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்ட காஷ்மீர் பகுதியில் இருந்த 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.