கிராமப் பகுதியில் மறைமுகமாக பாலியல் தொழில்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பெண்களை வைத்து, பாலியல் தொழில் செய்தவர்கள் உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பரமத்திவேலூர் அருகே வடக்கு நல்லியம்பாளையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரனுக்கு தொடர் புகார் சென்றுள்ளது.

இதையடுத்து, பரமத்திவேலூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீஸார் பாலியல் தொழில் நடந்த வீட்டை சுற்றிவளைத்து, திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வீட்டுக்குள் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த அழைத்து வரப்பட்டிருந்த 10 பெண்களும், 2 ஆண் வாடிக்கையாளர்களும் அங்கு இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய வடக்கு நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பரின் மனைவி சாமுண்டீஸ்வரி, பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையைச் சேர்ந்த சங்கர் , திருப்பத்தூர் அருகே லட்சுமி நகரைச் சேர்ந்த ஜோசப் மற்றும் பாலியல் உறவில் ஈடுபடவந்த வாடிக்கையாளர் இருவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட 10 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சாமுண்டீஸ்வரியை சேலம் பெண்கள் மத்திய சிறையிலும், சங்கர், ஜோசப், மற்றும் இரண்டு வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 4 ஆண்களை ராசிபுரம் கிளை சிறையிலும் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement