திருப்பதியில் தரிசனம் செய்த தமிழக முதல்வரை திட்டித்தீர்த்த பக்தர்

May 15, 2018, 09:56 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துக் கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பக்தர் ஒருவர் சரமாரியாக திட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்றிரவு சென்றிருந்தார். அப்போது, திருமலை மாடவீதியில் உள்ள வராகசாமி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு அவர் சென்றார். அங்கு தரிசனம் செய்து கொண்டிருந்தபோது அருகில் இருந்த பக்தர் ஒருவர் திடீரென தன் மீது சாமி வந்துவிட்டதாக உணர்ந்து ஆவேசமாக பேசினார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை சீரழித்துவிட்டதாகவும், தன்னை வந்து பார்க்குமாறும் அந்த பக்தர் ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, அந்த பக்தரை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கிச் சென்றனர். பின்னர், பக்தரிடம் இதுகுறித்து அந்த நடத்திய விசாரணையில், அவர் பெயர் ஸ்ரீராமலு என்றும் ஸ்ரீவில்லிபுத்தரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. முறையான விசாரணை நடத்திய பிறகு, ஸ்ரீராமலுவை போலீசார் விடுவித்தனர்.

இருப்பினும், சாமி வந்தாலும் உண்மையை தான் செல்லியிருக்கிறீர்கள் என்று அங்கிருந்த தமழிக பக்தர்கள் ஸ்ரீராமலுவை பாராட்டி வியந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading திருப்பதியில் தரிசனம் செய்த தமிழக முதல்வரை திட்டித்தீர்த்த பக்தர் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை