ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு 6 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார். ஆனால் இந்த முறை தாங்கள் ஆஜராக முடியாத சூழல் இருப்பதாக சசிகலா தரப்பில் விலக்கு கோரப்பட்டுள்ளதால் நாளை விசாரணை நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட விசாரணை முடிவுறும் தருவாயில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த 6 முறை சம்மன் அனுப்பியும், அவர் கால அவகாசம் கேட்டதால் தள்ளிப் போனது.
இந்நிலையில் 6 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நாளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராக உள்ளார். ஆனால் நாளை ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் நாளையும் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.