ஆரோக்கியமான கிரீம் மஷ்ரூம் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் - 200 கிராம் (நறுக்கியது)
வெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பல் (துருவியது)
வெங்காயம் - பாதி
பச்சை பட்டாணி - கால் கப்
சோளம் - கால் கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 2 கப் (அரை லிட்டர்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில், வெண்ணெய்ப் போட்டு உருகியதும், துருகிய பூண்டு சேர்த்து வதக்கி அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகும், நறுக்கிய வெங்காயம், வேகவைத்த பட்டாணி, சோளம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.
பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும், 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன், 2 கப் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பால் கெட்டியாக ஆரம்பிக்கும்போது மஷ்ரூம் கலவையை சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்தால்.
சுவையான கிரீமி மஷ்ரூம் சூப் ரெடி..!