லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க மனிதநேய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக மஜக தலைவர் தமிம் அன்சாரி கூறுகையில், லோக்சபா தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடவில்லை.
இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும். காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும். பிரச்சார அணுகுமுறைகள் மற்றும் வியூகங்கள் குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு எடுக்கப்படும்.
காங்கிரஸ் தலைமையிலான அணியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். மதச்சார்பற்ற சமூகநீதி கட்சிகள் இடம்பெறும் அணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.