ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை கோரும் மனு தள்ளுபடி!

by Mathivanan, Mar 1, 2019, 08:35 AM IST
Share Tweet Whatsapp

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை கோரி காந்திய மக்கள் இயக்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காந்திய மக்கள் இயக்கம் தொடர்ந்த வழக்கில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தாமல் கர்நாடகா எம்.பியின் மனைவிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது; ஆகையால் இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் பெஞ்ச், இத்திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்கிறது மத்திய அரசு.

ஆகையால் இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என உத்தரவிடப்பட்டது.

 

மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும்: ஸ்டாலின்


Leave a reply