இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விடுதலை செய்த விவகாரத்தை முன்வைத்து பாஜக தேசிய செயலர் எச். ராஜாவும் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனும் ட்விட்டரில் மோதி வருகின்றனர்.
ட்விட்டரில் தினமும் யாருடனானவது மல்லுக்கட்டுவது எச்.ராஜாவின் பாணி. திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலர் பேராசிரியர் சுப.வீயுடன் மல்லுக்கட்டினார் எச். ராஜா.
இந்த நிலையில் இன்று பாஜக ஆதரவாளராக டிவி விவாதங்களில் பங்கேற்கும் சுமந்த் சி. ராமனுடன் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் எச். ராஜா. ஜெய்சியே முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என அந்நாட்டு அமைச்சர் குரேசி ஒப்புக் கொண்டிருந்தார்.
இச்செய்தியை சுட்டிக்காட்டி, இம்ரான்கானை பாராட்டும் சுமந்த் சி ராமன் போன்றோர் இப்போது மசூத் அசாரை கொண்டுவருவார்களா? என கிண்டலடித்திருந்தார் எச். ராஜா. இதை மறுத்து ட்வீட் போட்டுள்ளார் சுமந்த் சி.ராமன்