சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது பப்ஜி (PUBG) கேமும் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேமுக்கு மிக அதிகமான பயனர்கள் இருந்து வந்த நிலையில் அதற்கு விதிக்கப்பட்ட தடை ஏமாற்றமாக அமைந்தது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான அகமதாபாத் பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது எந்த புண்ணியவானின் பிரகாசமான ஐடியா என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பாய்காட் கேள்வி எழுப்பியுள்ளார்
பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தால் அதை சாதனை என்று கூறுகிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் பிட்சை குறை கூறுவது என்ன நியாயம் என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா.
இந்தியாவில் இருந்து இலவசமாகவும், பணம் கொடுத்தும் வாங்கிய கொரோனா தடுப்பூசிகளை பங்களாதேஷ் தங்களுடைய நாட்டிலுள்ள விலை மாதர்களுக்குத் தான் முதலில் பயன்படுத்தியது. இதற்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறை கூறிய காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது
சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாகப் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. புதிய பிட்ச் என்பதால் காலையில் பிட்சைப் பரிசோதித்த பின்னரே வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இரு அணி கேப்டன்களும் கூறியுள்ளனர்.