திண்டுக்கல் லோக்சபா தொகுதியை திமுக கைகழுவும் முடிவில் இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் தொகுதியில் வலிமையான திமுக வேட்பாளர்கள் எவரும் இல்லை. தற்போது சாணார்பட்டி விஜயன் உள்ளிட்ட அவ்வளவாக அறிமுகம் இல்லாத நபர்கள்தான் சீட் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
இதனால் திமுக பெருந்தலைகள் வழக்கம் போல காங்கிரஸுக்கு இத்தொகுதியை ஒதுக்கிவிடலாம் என்கிற முடிவில் உள்ளனவாம். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் திமுக பெருந்தலைகள் தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளதாம்.
தேர்தல் செலவுகளை நீங்கள் பார்த்துக் கொண்டால் உங்களை ஜெயிக்க வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு என உறுதி அளித்துள்ளதாம் பெருந்தலைகள் குடும்பம். இதனால் திமுக தொண்டர்கள் சோர்வடைந்து போயிருக்கின்றனர் திண்டுக்கல்லில்.