காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சு நடத்துவதாகக் கூறப்பட்ட நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் எனக் கூறி வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் தனித் தே போட்டி என முதலில் அறிவித்தார் கெஜ்ரிவால். காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி தனித்தனியே போட்டியிட்டால் பாஜகவுக்கு ஆதாயமாகி விடும் என்று கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு முயற்சிகளை மேற்கொண்டார்.
இரு கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சும் நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர, டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சரிசமமாக தொகுதிகள் ஒதுக்கக் கோரினராம்.
இற் நிலையில் ஆம் ஆத்மி தனித்தே போட்டி என்று கூறிவிட்ட கெஜ்ரிவால், திடீரென மொத்தமுள்ள 7 தொகுதிகளில் மேற்கு டெல்லி தவிர்த்து 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.