திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அத்தொகுதி தாரைவார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட சாணார்பட்டி விஜயன் உள்ளிட்ட பெரிய அளவு அறிமுகம் அல்லாதவர்களே மனுத்தாக்கல் செய்துள்ளனர். இத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் தெரிவித்துவிட்டார்.
இதனால் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்குத்தான் இத்தொகுதி தாரை வார்க்கப்படும் என்கிற நிலைமை உள்ளது. இதையடுத்து திண்டுக்கல் திமுகவில் கோலோச்சும் பெருந்தலைகள் கார்த்தி சிதம்பரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
தேர்தல் செலவுகளை முழுமையாக நீங்கள் பார்த்துக் கொண்டால் உங்களை ஜெயிக்க வைக்க வேண்டியது எங்களது பொறுப்பு என கூறியுள்ளனர். கார்த்தி சிதம்பரம் நல்ல யோசனையாக இருக்கிறதே என கூறியிருக்கிறாராம்.