திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி. இன்று விருப்ப மனு அளித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறப்படுகிறது. கடந்த 1-ந் தேதி முதல் பலரும் விருப்ப மனுவை பூர்த்தி அண்ணா அறிவாலயத்தில் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் துத்துக்குடி தொகுதியில் களம் இறங்க சில மாதங்களுக்கு முன்பே அத் தொகுதியில் பணிகளை துவங்கி விட்ட கனிமொழி இன்று விருப்ப மனுவை அறிவாயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.பாரதியிடம் வழங்கினார். அப்போது கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
இதேபோன்று அமமுகவில் இருந்து சமீபத்தில் விலகி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பம் தெரிவித்து மனு அளித்தார்.