தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர கடைசிக்கட்ட முயற்சி - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை

admk leaders discuss with CM edappadi Palani Samy

Mar 6, 2019, 11:07 AM IST

தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வரும் கடைசிக்கட்ட முயற்சிகளில் அதிமுக இறங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணி பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அமரச் செய்து விட வேண்டும் என அதிமுக, பாஜக தரப்பில் தீவிரம் காட்டப்டப்பட்டு வருகிறது. தேமுதிக வோ இன்னும் பிடி கொடுக்காமல் பேரத்திலேயே குறியாக இருக்கிறது. பாமகவுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் அல்லது 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சீட் ஒதுக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் பிடிவாதம் செய்வதாக கூறப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்குள் கூட்டணி முடிவை அறிவிக்க தேமுதிகவுக்கு அதிமுக தரப்பில் கெடு விதித்தும் முடிவு எவ்வித இணக்கமான அறிவிப்பும் தேமுதிக தரப்பில் வெளியாகவில்லை.

இதனால் தேமுதிகவை சமரசம் செய்யும் கடைசி நேர முயற்சிகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

You'r reading தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர கடைசிக்கட்ட முயற்சி - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை