மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலான குழு தயாரித்த அறிக்கை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க பொன்னையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஒரு மாதத்திற்குள் மேலாக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், கவர்ச்சி அறிவிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் திருத்தம் இருந்தால் செய்யப்பட்டு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சில தினங்களில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் தலைமையில் தலைமைக் கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதிலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.