பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த பிறகு அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மோடி ஓபிஎஸ், இபிஎஸ் ராமதாஸ் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதலில் பேசிய ஓபிஎஸ் , பிரதமர் மோடியை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். அவரை போலவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மோடியை ஓவராக புகழ்ந்தார்.
முதலில் பேசிய ஓபிஎஸ், ``தீய சக்திகளை எதிர்கொள்ள வெற்றி கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது மோடி அரசு.நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என நாடே சொல்கிறது. யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க தைரியம் இல்லாத ஸ்டாலின், அதிமுக கூட்டணியை விமர்சிக்கிறார். சென்னையில் ராகுலை பிரதமர் என கூறிய ஸ்டாலினுக்கு கொல்கத்தாவில் அதை சொல்ல தைரியமில்லை" என்றார்.
இதன் பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி . புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டார் .திமுக ஆட்சியில் இருந்து போது நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்திய நாட்டை ஆளும் தகுதியுள்ள ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டவர் மோடி. திமுக ஆட்சியில் இருந்து போது நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை" என்றார்.