கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்கிறது. மனோகரின் மறைவையடுத்து கூட்டணியில் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்சியினரைச் சமாதானம் செய்யும் பணியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் களத்தில் இறங்கியுள்ளனர். இதற்காக,காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவேல்கர் இல்லத்தில் நேற்று இரவு எம்.எல்.ஏ-கள் ஆலோசனை கூட்டம் நடந்து.
இந்நிலையில், கோவா ஆளுநர் மிருதுளாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளனர். மனோகர் பாரிக்கர் இறுதிச் சடங்கு நடக்கும் முன்பே ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸின் நடவடிக்கையால் கோவா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. பாஜக கவிழுமா? அல்லது தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.