காப்பான் படத்தில் இந்திய பிரதமராக மோகன்லால்… சூர்யாவின் ரோல் என்னத் தெரியுமா

Suriya role in Kappan movie

by Sakthi, Mar 18, 2019, 15:20 PM IST

‘காப்பான்’ படத்தில் நடிகர் சூர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. வதந்திகளும் பரவின. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தனது கதாபாத்திரம் என்னவென்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

காப்பான்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காப்பான்’. சூர்யா, மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹீரோயினாக சயீஷா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்பு உயர் போலீஸ் அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து உறுதியானத் தகவல்கள் வெளியாகவில்லை.  

இந்நிலையில் நேற்றிரவு நடிகர் மோகன்லாலின் முகநூல் பக்கத்தில், அவருடைய  நேர்காணல் லைவ்வாக ஒளிபரப்பானது. அதில், வீடியோ கால் மூலம் சூர்யா பேசினார். அப்போது ‘காப்பான்’ குறித்து ஏதாவது பகிர்ந்து கொள்ளும்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சூர்யா, ‘ஏற்கெனவே ஊடகங்களில் என் கதாபத்திரம் பற்றி செய்திகள் வெளியாகின. அதை இப்போது நான் உறுதி செய்கிறேன். மோகன்லால் சார் இந்திய பிரதமராகவும், நான் அவரைப் பாதுகாக்கும் எஸ்பிஜி (Special Production Group) அதிகாரியாகவும் நடிக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சூர்யாவுக்கு சிறந்த கம் பேக்காக இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை