தேர்தல் சின்னம் கேட்டபோது உயிருடன் இருக்கும் சின்னத்தை தர முடியாது என்றார்கள்.
ஆனால் தற்போது விவசாயி சின்னத்தை எனக்கு அளித்துள்ளனர். அப்படியெனில் விவசாயிகள் உயிரோடு இல்லை என தேர்தல் ஆணையம் நினைக்கிறதா என தெரியவில்லை? என்று தேர்தல் ஆணையத்தை தன் கட்சியின் சின்னத்தை வைத்தே கிண்டலடித்துள்ளார் சீமான்
சென்னையில் தனது கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடும
மயில் சின்னத்தை கேட்டிருந்தோம், ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு விவசாயி சின்னத்தை கொடுத்துள்ளது.
விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளது.
வரும் 22-ந்தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின் எங்களுடைய வேட்பாளர்களை 23-ந் தேதி ஒட்டுமொத்தமாக அறிவிப்போம் என்றார்.
தேர்தல் ஆணையத்தில் முதலில் மயில் சின்னம் கேட்டபோது உயிருடன் உள்ள சின்னங்களை தர முடியாது என்றார்கள். ஆனால் இப்போது விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். அப்படி என்றால் நாட்டில் இன்று விவசாயிகள் உயிருடன் இல்லை என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறதா? என்று கட்சியின் சின்னத்தைக் கூறியே தேர்தல் ஆணையத்தை சீமான் சீண்டினார்.