அதிமுக, திமுகவை ஓரம் கட்ட... திண்டுக்கலில் களம் இறங்கிய மன்சூர் அலிகான்!

actor mansoor ali khan filed his nomination

by Suganya P, Mar 22, 2019, 03:23 AM IST

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான்.

தனது நடிப்பின் மூலம், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் மசூர் அலிகான். ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து சிறைக்கும் சென்றுள்ளார். அவ்வப்போது, சர்ச்சை வலையில் சிக்கி  கொள்வதும் உண்டு.

சீமான், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மன்சூர் அலிகான், அக்கட்சியின் சார்பாக தனது சொந்த தொகுதியான திண்டுக்கல் தொகுதி சார்பாக போட்டியிடுகிறார். இதற்காக, தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார். மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம் விற்பது என ஒரு கலக்கு கலக்கி வருகிறார் மன்சூர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக முதல் வேட்புமனுவைத் திண்டுக்கல் ஆட்சியரிடம் வழங்கினார். 

You'r reading அதிமுக, திமுகவை ஓரம் கட்ட... திண்டுக்கலில் களம் இறங்கிய மன்சூர் அலிகான்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை