தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள சட்டமன்றம் தொகுதித் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில், போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அன்றே, தேர்தல் அறிக்கையையும் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
இந்நிலையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை இறுதி தீர்ப்பளிக்க உள்ளது. இதன் பின்னர், வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் எனக் கூறிய டிடிவி தினகரன்,
எந்த பேரமும் பேசாமல் அமைப்பதுதான் கூட்டணி. ஆனால், வீடுவீடாக சென்று பேரம் பேசி கூட்டணி அமைத்துள்ளனர். இன்று ஆட்சியில் உள்ளவர்கள், பையில் அம்மாவின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இது அம்மாவின் ஆட்சி என்று சொல்லி அம்மா பிச்சையாகத் தந்த ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அம்மா மறைவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அம்மா புகைப்படம் திறக்கக்கூடாது என்றும், அம்மா நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர் என்று ஆளும் அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் டிடிவி தினகரன்.