டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் உள்ள அமமுகவினர் தீர்ப்பு வெளியான பின்னரே வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.
குக்கர் சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் இழுத்தடிப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே கோபமடையச் செய்துள்ளது. நீதிபதிகள் கடுமை காட்டிய நிலையில் தமிழகத்திற்கான காலியாக உள்ள சின்னங்கள் பட்டியலை நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம் .
இன்று வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக குக்கர் சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளிக்கிறது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீர்ப்பை எதிர்பார்த்துள்ள அமமுகவினரும் அக்கட்சி வேட்பாளர்களும் தீர்ப்பு வெளியான பின் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.