70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் நான் எப்படி செய்ய முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், 5 ஆண்டு கால ஆட்சியில் மிகப்பெரிய சாதனைகளை செய்ய இயலாது என்றார். 70 ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியினர் சாதித்தது என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்திய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் 5 ஆண்டுகள் தேவைப்படுவதாக மோடி கூறினார். இதனால் பா.ஜ.க விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதம், விலைவாசி உயர்வு, கருப்பு பணம், ஊழல் போன்றவையே மிகுந்து காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்தியாவின் வளர்ச்சி பின்நோக்கி சென்று விடும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார்.