கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதல் இடம் பிடித்துள்ளது.
இணையதள விளம்பர தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால், அரசியல் கட்சிகளும் தங்கள் விளம்பரங்களை ஆன்லைனில் வெளியிட விருப்பம் காட்டுகின்றன. அந்த வகையில், நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காகக் கூகுளில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும், மதச்சார்பற்ற ஜனதாதளம், தெலுங்கு தேச கட்சி உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பெரும் தொகையை செலவிட்டுள்ளன. அதன் விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் தற்போது வரை கூகுளில் அதிக விளம்பரம் செய்ததில், மத்தியில் ஆளும் பாஜக அரசு முதல் இடத்தில் உள்ளது. 554 அரசியல் விளம்பரங்களை வெளியிட்டுள்ள பாஜக, இதற்காக சுமார் ரூ.1.21 கோடியைச் செலவிட்டுள்ளது. பஜாக-வை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், 1.04 கோடி ரூபாய், 107 விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது. அடுத்த இடத்தில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்.
பாஜக-வின் எதிர்கர்கத்சியான காங்கிரஸ் இந்த பட்டியலில் 6-ம் இடத்தை பிடித்துள்ளது. கட்சி சார்ந்த 14 படங்களை விளம்பரம் செய்திருக்கும் காங்கிரஸ் ரூ.54,100 செலவிட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக பார்த்தல், ஆந்திர பிரதேசம் தான் முதல் இடம். இந்த மாநிலத்தில் மட்டும் ரூ. 1.73 கோடி செலவிடப்பட்டுள்ளது. பீகார் மற்றும் டெல்லி அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்திருக்கிறது.