ஆண்டுதோறும் பெண்களுக்கு இலவசமாக 2 சேலையும், வயதான மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
நம்ம பக்கத்து மாநிலமான ஆந்திராவில் வருகின்ற 11ம் தேதி 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தை பொறுத்தவரை பலமுனை போட்டி நிலவுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், பா.ஜ. மற்றும் ஜனசேனா கூட்டணி என பல முனை போட்டி நிலவுகிறது.
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். கட்சிகள் அண்மையில் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். ஆந்திர மக்களை கவரும் வகையில் கவர்ச்சி மற்றும் இலவச வாக்குறுதிகளை அளித்து இருந்தன. இந்த நிலையில் நடிகரும், ஜன கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் தனது தேர்தல் வாக்குறுதியில், மற்ற கட்சிகளை தூக்கி சாப்பிடும் வகையில் பல இலவச திட்டங்களை வாக்குறுதியாக அளித்துள்ளார். பெண்களுக்கு ஆண்டுதோறும் சீதனமாக 2 சேலை, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.8,000 நிதி உதவி, 58 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், நெசவாளர்கள்,மீனவர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.5,000, கோதாவரி பகுதியில் ரூ.5,000 கோடி மதிப்பில் தானிய மற்றும் பழ சந்தை உருவாக்கப்படும். அனைத்து தேர்வுகளுக்கும் ஓராண்டுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை பவன் கல்யாணம் அளித்துள்ளார்.
பவன் கல்யாண் ஜனசேனா கட்சி கம்யூனிஸ்ட், பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார். ஜனசேனாவின் தோ்தல் அறிக்கையை இளைஞர்களை ஓட்டுகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.