இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள 12 தொகுதிகளுக்கு உளவுத்துறை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 12 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், சிதம்பரம், திண்டுக்கல், தேனி, நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மக்களவைத் தொகுதிகளில் இதுவரை கண்டிராத அளவில் வன்முறை வெடிக்கும் என உளவுத் துறை தமிழக அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அலர்ட் செய்துள்ளது.
இதில் பாமக ஏழு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அன்புமணி ராமதாஸின் பாமகவுக்கும் தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பயங்கர போட்டி நிலவுவதால், வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ள 12 தொகுதிகளுக்கும் கூடுதல் போலீசாரை நியமிக்க ஆலோசனைகள் நடந்து வருகின்றன.