தீவிரவாதிகளின் ஆயுதமான வெடிகுண்டுவை விட ஜனநாயக மக்களின் வாக்காளர் அட்டை பயங்கர சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள ரணிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் பாஜக தலைவர் அமித்ஷாவும் உடன் வந்து அவரது வாக்கினை செலுத்தினார்.
வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்த பிரதமர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் என் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். கும்பமேளாவில் குளித்தால் கிடைக்கும் தூய்மையை வாக்களிப்பதன் மூலம் மக்கள் உணராலாம். தீவிரவாதிகளின் ஆயுதம் வெடிகுண்டு என்றால், அதைவிட வலிமையான வெடிகுண்டு ஜனங்கள் கையில் இருக்கும் வாக்காளர் அட்டை” என பேசிய மோடி, மக்கள் அதை உணர்ந்து தங்களது வாக்கினை செலுத்த வேண்டும் என்றார்.
காலை 9 மணி நேர நிலவரப்படி பீகாரில் 3.11% வாக்குகளும், கோவாவில் 0.73% வாக்குகளும், அசாமில் 8.35% வாக்குகளும் பதிவாகி உள்ளன.