வாரணாசியில் வேட்பாளரை நிறுத்தியது சமாஜ்வாடி! பிரியங்காவுக்கு ஆதரவு இல்லை!!

Samajwadi Party Fields Shalini Yadav To Take On PM Modi In Varanasi

by எஸ். எம். கணபதி, Apr 23, 2019, 12:50 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. சமாஜ்வாடி கட்சி அங்கு ஷாலினி யாதவ் என்பவரை வேட்பாளராக அறிவித்து விட்டது.

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டில் குஜராத் மாநிலம் வதேதரா மக்களவை தொகுதியிலும், உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார். அப்போது காங்கிரசுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருந்ததால், மோடி 5 லட்சத்து 82 ஆயிரம் வாக்குகள் பெற்றார். அடுத்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் 75 ஆயிரம், சமாஜ்வாடி 45 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றன.

இந்த முறை வாரணாசி தொகுதியில் மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மோடி இந்த தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், இங்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு யோசித்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த மாதம் கூறியிருந்தார்.

இதன் பின்னர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடத் தயாராக உள்ளதாக கூறினார். எனவே, அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அது மோடிக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வேட்பு மனுதாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கும் வரை ஆம் ஆத்மி, பகுஜன்சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி ஆகியவை வாரணாசிக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால், மோடி-பிரியங்கா என்று நேரடிப் போட்டி வருமா என்ற பரபரப்பு காணப்பட்டது.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்க்கவில்லை. டெல்லியில் இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து விட்டன. மேலும், சமாஜ்வாடி கட்சியும் நேற்று வாரணாசிக்கு தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. அது மட்டுமல்ல. அக்கட்சி, காங்கிரசுக்கு இன்னொரு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது.

அதாவது, காங்கிரஸ் சார்பில் முன்பு வாரணாசியில் வென்றவரும், ராஜ்யசபா துணை தலைவராக ஒரு முறை பதவி வகித்தவருமான ஷியாம்லால் யாதவின் மருமகள் ஷாலினி யாதவை சமாஜ்வாடி கட்சி தம் பக்கம் இழுத்து கொண்டிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு வாரணாசியில் காங்கிரஸ் சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்தான் இந்த ஷாலினி யாதவ்.

இவர் ஏப்.22ம் தேதி காலையில் காங்கிரசில் இருந்து சமாஜ்வாடி கட்சிக்கு தாவினார். மாலையில் இவரையே சமாஜ்வாடியின் வாரணாசி தொகுதி வேட்பாளராக அகிலேஷ் அறிவித்து விட்டார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடும் திட்டம் புஸ்வாணமானது. இனிமேல், பா,ஜ.க, மற்றும் பகுஜன்-சமாஜ்வாடி கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, வாரணாசியில் களம் இறங்குவாரா என்பது சந்தேகம்தான். எனவே, இந்த தேர்தலி்ல் பிரியங்காவோட பிரச்சாரம் செய்வது மட்டும்தான்!

மோடியை எதிர்ப்பது யார்? மிரட்டும் எதிர்க்கட்சிகள்!!

You'r reading வாரணாசியில் வேட்பாளரை நிறுத்தியது சமாஜ்வாடி! பிரியங்காவுக்கு ஆதரவு இல்லை!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை