அதிகாலையில் வாக்களித்த பிரியங்கா சோப்ரா, ரேகா 4ம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பு

Advertisement

நாடாளுமன்ற தேர்தலின் நான்காவது கட்டமாக இன்று 71 தொகுதிகளிலும், காஷ்மீர் அனந்தநாக் தொகுதியில் சில பகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

சில இடங்களில் வாக்கு எந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ரேகா, காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர்.../cinema/9046-prime-minister-modi-participation-at-priyanka-nick-jonas-wedding-reception.html

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. நான்காம் கட்டமாக, இன்று பீகாரில் 5, ஜார்கண்டில் 3, மத்திய பிரதேசத்தில் 6, மராட்டியத்தில் 17, ஒடிசாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13, மேற்கு வங்காளத்தில் 8, காஷ்மீரில் 1 (அனந்தநாக் தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் மட்டும்) என 9 மாநிலங்களில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த நான்காவது கட்ட தேர்தல், பாரதீய ஜனதா கட்சிக்கு மிக முக்கியமானது. ஏனெனில், கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 72ல் 45 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி இருந்தது. ராஜஸ்தானில் 13, உத்தரபிரதேசத்தில் 12, மத்திய பிரதேசத்தில் 5, பீகாரில் 3, ஜார்கண்டில் 3, மராட்டியத்தில் 8, மேற்கு வங்காளத்தில் 1 தொகுதியும் அடங்கும்.

ஒடிசாவில் 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 42 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த 4–வது கட்ட தேர்தலில் முக்கிய தலைவர்கள் பலர் களத்தில் உள்ளனர். பீகாரில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பெகுசாராய் தொகுதியில் மாணவர் தலைவர் கன்னையா குமாருடன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) மோதுகிறார். தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மராட்டியத்தில் மும்பை மாநகரில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா (மும்பை தெற்கு), நடிகை ஊர்மிளா (மும்பை வடக்கு), பிரியா தத் (மும்பை வடமத்தி), பா.ஜ.க.வின் பூனம் மகாஜன் (மும்பை வடமத்தி) ஆகியோர் உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்), பா.ஜ.க.வின் சாமியார் சாக்ஷி மகராஜ் (உன்னாவ்), காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா (தாருஹரா) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவில்தான் அதிகாலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. மும்பை வெர்சோவாவில் நடிகை பிரியங்கா சோப்ரா, பந்த்ராவில் நடிகை ரேகா மற்றும் நடிகையும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஊர்மிளா, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலேயே மும்பையில் வாக்களித்தனர்.

மும்பை மலாட் மேற்கு பகுதியில் வாக்கு எந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் ஆசனால் தொகுதியின் ஜெமுவாவில் மத்திய படைகள் பாதுகாப்பு போடவில்லை என்று வாக்காளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மத்தியபிரதேசத்தில் சிந்த்வாரா தொகுதியின் சிகர்பூரில் முதலமைச்சர் கமல்நாத் வாக்களித்தா்ர்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த தேர்தலில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மீண்டும் முதலிடத்தை பிடிக்க கத்ரீனா கைஃப் தீவிரம்; பி.டி. உஷா பயோபிக்கில் நடிக்க திட்டம்!

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>