அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், மேற்கு கோன்சா தொகுதியின் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. திரோங் அபோ மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், இன்று மர்மநபர்கள் சிலர், திரோங் வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் திரோங் அபோ மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, தேசிய மக்கள் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கொனார்டு சங்மா, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.