ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முறை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ். உடல்நிலையைக் காரணம் காட்டி தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேர்தலுக்கு முன்னரே அறிவித்துவிட்டார்.
இதனால் புதிய அமைச்சரவையில் சுஷ்மா ஸ்வராஜ் இடம் பெறவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து இந்த இரு மாநிலங்களுக்குமே ஒரே ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வந்தார்.
ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து, ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பொறுப்பேற்றது.இந்நிலையில் தான் சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திராவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.தெலுங்கானா ஆளுநராக நரசிம்மனே தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.