அடிக்கிற வெயிலுக்கு இதமா மசாலா மோர் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
தயிர் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - 2 சிட்டிகை
வெள்ளரிப்பிஞ்சி
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
உப்பு
செய்முறை:
முதலில், மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு, தயிர் இரண்டு கரண்டி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, மற்றொரு முறை தயிர் முழுவதும் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதனை வடிகட்டியப்பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
மோரை ஒரு தம்ளரில் ஊற்றி பொடியாக நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
தாகம் தணியும் மசாலா மோர் ரெடி..!