ஸ்பைசியான நண்டு ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நண்டு மசாலா & ஒரு கப் (ஓடு நீக்கியது)
முட்டை - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகு - சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்த்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, நண்டு மசாலா கிரேவியில் இருந்து ஓடு நீக்கிய நண்டு, மிளகு & சீரகத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையை முட்டையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஊற்றி பரப்பவும். அதன்மீது மிளகுத்தூள் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான நண்டு ஆம்லெட் ரெடி..!