நெருப்பு இல்லாமல் புகையுமா? பா.ஜ.க.விடம் சோனியா கேள்வி

Attempts made to mislead voters: Sonia Gandhi in her first post-poll speech.

by எஸ். எம். கணபதி, Jun 13, 2019, 11:16 AM IST

‘ஆட்சி அதிகாரத்திற்்காக எல்லா நடைமுறைகளையும் மீறினார்கள்’’ என்று பா.ஜ.க.வை காட்டமாக விமர்சித்துள்ளார் சோனியா. மேலும், தேர்தல் முறைகேடு பற்றி அவர் கூறுகையில், நெருப்பு இல்லாமல் புகையுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்குப் பிறகு மவுனம் காத்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று முதல் முறையாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு நேற்று சென்ற சோனியா, அங்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது மீடியா அனுமதிக்கப்படவில்லை.

எனினும், அவர் பேசியவற்றில் சில பகுதிகளை காங்கிரஸ் நிர்வாகிகள் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதில், அவர் பேசியிருப்பதாவது:

தேர்தல் எப்படி நடந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். உங்களில் சிலர் கூட இங்கு அது பற்றி பேசினார்கள். ஆட்சி அதிகாரத்திற்காக அவர்கள்(பா.ஜ.க.) என்னவெல்லாம் செய்தார்கள்? நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களை திசைதிருப்புவதற்காக எல்லா விதிகளையும் மீறினார்கள். எந்த நடைமுறையையும் அவர்கள் பின்பற்றவே இல்லை.
நீங்கள் மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே நடந்தது எல்லாம் தெரியும். சாதாரண மரபுகளை கூட அவர்கள்(பா.ஜ.க.) மதிக்கவில்லை. இதற்கு மேல் எதுவுமில்லை. இந்த அளவுக்கு எல்லை மீறியது மிகவும் துரதிருஷ்டமானது.

நமது நாட்டு தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அவற்றை ஒதுக்கி தள்ளி விட முடியாது. நெருப்பில்லாமல் புகையுமா என்ற பழமொழியைத் தான் கேட்க வேண்டியிருக்கிறது.
இந்த தொகுதி மக்களுக்கும், எனக்கும் உள்ள நல்ல உறவை யாராலும் ெகடுக்க முடியாது. இந்த தொகுதி மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு சோனியாகாந்தி பேசியிருக்கிறார்.

You'r reading நெருப்பு இல்லாமல் புகையுமா? பா.ஜ.க.விடம் சோனியா கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை