பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடரவேண்டும் என, டெல்லியில் நடைபெற்ற மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை இருப்பதால், தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உள்துறை அமைச்சராக மட்டும் அமித்ஷா இருப்பார் என கூறப்பட்டது. மேலும் பாஜக தேசிய தலைவர் பதவிக்கு ஜே.பி.நட்டா பெயரும் அடிபட்டது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில பாஜக தலைவர்கள் கூட்டத்தில் அமித்ஷாவே தேசிய தலைவராக நீடிக்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஜார்கண்ட, மகாரஷ்ட்ரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் வர உள்ளதால் கட்சிக்கு வலுவான தலைவர் தேவை என மூத்த நிர்வாகிகள் அமித்ஷா மற்றும் மோடியிடம் வலியுறுத்தினார்களாம்.
மேலும், பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் குழு அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் மாநிலத்துக்கு இருவர் அல்லது ஒருவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- தமிழ்