வலிமையான எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு பலம்

PM Modi says, Active opposition is important in parliament democracy

by Nagaraj, Jun 17, 2019, 13:16 PM IST

வலிமையான எதிர்க்கட்சிகள் இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம் என்றும்
நாடாளுமன்றம் சுமூகமாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 30-ந் தேதி பதவியேற்றது. இந்நிலையில் 17-வது மக்களவையில் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் 542 பேர் பதவியேற்கின்றனர்.. அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் இன்று மக்களவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் வெளியே செய்திர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண் எம்பிக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். புதிய நண்பர்களுடன், புதிய கனவுகளுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்குகிறது.
மக்களின் விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றுவதற்காக பணியாற்றுகிறோம். மக்கள் மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

வலிமையான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம். எதிர்க்கட்சிகளின் தேவையையும், மதிப்பையும் அறிந்துள்ளோம். மக்களுக்கு ஆதரவான முடிவுகளை ஆதரிக்க அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியமானது.

எதிர்க்கட்சிகள் அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் சுறுசுறுப்பாகப் பேசுவார்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். மக்களவையில் எதிர்க்கட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவை துணை சபாநாயகர் யார்? ஒய்எஸ்ஆர் கட்சிக்கு பாஜக தூண்டில் ... மவுனம் சாதிக்கும் ஜெகன்

You'r reading வலிமையான எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு பலம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை