உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் வெளியிட ஸ்டாலின் கோரிக்கை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தி்ன் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவெடுத்தது. இதன்படி, முதல் கட்டமாக, இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடா, மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் தீர்ப்புகள் இந்த வாரம் முதல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு வரும் அப்பீல் வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழில் தீர்ப்புகளை வெளியிட வேண்டுமென்று தமிழகத்தில் உள்ள அரசியல்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு, தலைமை நீதிபதி விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நல்ல முயற்சியை மனதார வரவேற்கின்றேன். இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும்.

அதே வேளையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியான தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது.

ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். தீர்ப்புகளின் மொழியாக்கத்தில், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்ததும் – முதன்மையானதும் - இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்றுச் செழுமையானதுமான செம்மொழித் தமிழை, உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத் தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழறிஞர்களுக்குப் பல்வேறு அய்யப்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எனவே, தமிழ் மொழியிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக புலி பாயுமா? எடப்பாடி அரசு கவிழுமா?

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!