அமேதியில் ராகுல் காந்தி - தோல்விக்குப் பின் முதன்முறையாக பயணம்

Rahul Gandhi to visit Amethi today, first time after his defeat

by Nagaraj, Jul 10, 2019, 11:47 AM IST

மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த பின் முதல் முறையாக ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டுவிட்டரில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று ஒரு கோடியை எட்டியுள்ளதாகவும், அந்த மகிழ்ச்சியை அமேதி மக்களுடன் உற்சாகமாக பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பர்ய தொகுதியாகும். 1980-ல் சஞ்சய் காந்தி, அதன் பின் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வெற்றி பெற்றனர்.2004 முதல் தொடர்ச்சியாக 3 முறை ராகுல்காந்தி இங்கு வெற்றிபெற்று வந்தார். கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற பின் கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதியில், ஸ்மிருதி இரானியிடம் 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்றுப் போனார். ஆனால் வயநாடு தொகுதியிலோ 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் எம்.பி.யாகி விட்டார்.

அமேதி தொகுதியில் மட்டுமின்றி நாடு முழுவதும் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வியால், விரக்தியின் உச்சத்துக்கு சென்று விட்டார் ராகுல்காந்தி. இதனால் தோல்விக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாகக் கூறி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியிருந்தார்.

கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார் , காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஏற்க மறுத்து, தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தனது முடிவில் பிடிவாதமாக உள்ள ராகுல் காந்தி தனது முடிவு இறுதியானது என்று உறுதிபடத் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், இன்று தமக்கு தோல்வியை பரிசாகக் கொடுத்த அமேதி தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகி ஏறத்தாழ 50 நாட்கள் ஆன நிலையில் இன்று அமேதி செல்லும் ராகுல் காந்தி, அங்கு தேர்தலின் போது பணியாற்றிய கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன், தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கிறார். பின்னர் சில கிராமங்களுக்கு விசிட் செய்யும் ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்க உள்ளார்.

இதற்கிடையே இன்று ராகுல் காந்தி டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், டுவிட்டரில் தம்மை பின் தொடர்வோரின் எண்ணிக்கை இன்று ஒரு கோடியை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை அமேதி தொகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்று உற்சாகமாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

ராகுல்காந்தியின் பிடிவாதம் நீடிப்பு... தலைவர் பதவியில் நீடிக்கக் கோரி இளைஞர் காங்கிரசார் தர்ணா

You'r reading அமேதியில் ராகுல் காந்தி - தோல்விக்குப் பின் முதன்முறையாக பயணம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை