பிரிட்டன் பிரதமரின் முட்டாள்தனம் கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்

Donald Trump calls British Ambassador very stupid as diplomatic spat escalates

by எஸ். எம். கணபதி, Jul 10, 2019, 12:27 PM IST

பிரிட்டன் தூதர் தம்மை திறமையற்றவர் என்று விமர்சித்த விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தின் ‘பிரக்‌ஸிட்’ விவகாரத்தில் முட்டாள்தனமாக தெரசா மே செயல்பட்டார் என்று கூறியிருக்கிறார் டிரம்ப்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. இதை பிரிட்டன் பிரதமர் தெரசா மே விரும்பாமல், தள்ளிப் போட்டு வந்தார். மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் விலகுவதற்கான ஒப்பந்தம்(பிரக்ஸிட்) தொடர்பான பேச்சுவார்த்தையிலும் அவரால் சுமுக முடிவு எட்ட முடியவில்லை. அவரது தீர்மானங்கள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தோல்வியடைந்தன.

இதற்கிடையே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென்று மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இந்நிலையில், தெரசா மேவுக்கு நெருக்கமானவரும், அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதருமான கிம் டர்ரோச் சமீபத்தில் பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய ஒரு ரகசிய கடிதம் ‘லீக்’ ஆகிவிட்டது. அதில், அவர் டிரம்ப் திறமையற்றவர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்தும் விமர்சித்திரந்தார்.

இந்த கடித விவரங்கள் கசிந்ததும், டிரம்ப் கடும் ேகாபம் கொண்டார். ‘‘அந்த தூதர் கிம் டர்ரோச்சை எனக்கு தெரியாது. அவருக்கு அமெரிக்காவில் பெரிய ரசிகர்கள் யாருமில்லை. ஆனால், அவர் மிகப் பெரிய முட்டாள் என்று என்னிடம் சொன்னார்கள். இனிமேல் அவருடன் அமெரிக்கா எந்த தொடர்பும் வைத்து கொள்ளாது’’ என்று கடுமையாக சாடினார்.

ஆனால், தெரசா மே, ‘‘தூதர் கிம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் தனது பணியைச் செய்துள்ளார். அதற்காக அவரது கருத்தை பிரிட்டன் அரசு கருத்தாக எடுத்து கொள்ளக் கூடாது. அந்த கடிதம் எப்படி வெளியானது என்று விசாரிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இது டிரம்ப்பிற்கு மேலும் கோபத்தை கிளறி விட்டது. இதையடுத்து, அவர் அடுத்தடுத்து போட்ட ட்விட்களில், ‘‘பிரக்ஸிட் விவகாரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரசா மேவுக்கு நான் ஆலோசனை கூறினேன். ஆனால், அவர் தனது முட்டாள்தனமான வகையிலேயே சென்று எதுவும் செய்ய முடியாமல் கோட்டை விட்டார். நல்ல வேளை, பிரிட்டனுக்கு நற்செய்தி. விரைவில் அவர்களுக்கு புதிய பிரதமர் கிடைக்கப் போகிறார்’’ என்று கூறியிருந்தார்.

மேலும், ‘‘உலகில் எங்கும் இல்லாத அளவுக்க மிகச் சிறந்த பொருளாதாரத்தையும், ராணுவத்தையும் கொண்டது அமெரிக்கா’’ என்றும் கிம் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதிலளித்திருக்கிறார்.

ஈரான் மீது தாக்குதல்; மனம் மாறிய டிரம்ப்

You'r reading பிரிட்டன் பிரதமரின் முட்டாள்தனம் கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை