விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் திறப்பு

Kamarajar memorial manimandapam opened in virudhu Nagar

by Nagaraj, Jul 15, 2019, 11:52 AM IST

விருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்து காந்தியின் சீடராக இருந்தவர் காமராஜர்.நாடு சுதந்திரம் பெற்ற பின் தமிழகத்தில் 9 ஆண்டு காலம் முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜரின் 117-வது பிறந்த தினம் இன்று .சாமானியனுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டி தொட்டியெங்கும் பள்ளிகளைத் திறந்து கல்விக் கண் திறந்த காமராஜர் என்று தமிழக மக்களால் போற்றப்படுபவர். இதனால் அவருடைய பிறந்த நாளை கல்வி நாளாக அரசு கொண்டாடுகிறது

காமராஜர் நினைவாக, விருதுநகர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி உள்ளார். 12 ஏக்கர் பரப்பளவில் சுமார் 25 கோடி ரூபாய் செலவில் இந்த மணிமண்டபம் கட்டும் பணி கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனை, காமராஜரின் 117-வது பிறந்த தினமான இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், காணொலி காட்சி மூலம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் 6ற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காமராஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நடந்த விழாவில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அடுத்த மாதத்திற்குள் தமிழிசை மாற்றமா?

You'r reading விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் திறப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை