சங்கரய்யாவுக்கு 98 வயது ஸ்டாலின் நேரில் வாழ்த்து

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று(ஜூலை15) 98வது பிறந்தநாள். இதையொட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், மூத்த தலைவர் சங்கரய்யாவை, இன்று காலை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்துடன், வாழ்த்துச் செய்தியையும் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பழுத்தஅனுபவமுள்ள மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர்பெரியவர் என்.சங்கரய்யாவுக்கு 98 ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கடலாகக் காட்சியளிப்பவர். ஏழை-எளிய அடித்தட்டு மக்களின்- உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைக்குரலாக ஒலிப்பவர்.

நேர்மையான அரசியலின் நிலைக்கண்ணாடியாகப் பொதுவாழ்வில் திகழ்பவர்.
பொதுவாழ்விற்குத் தேவையான அருங்குணங்களைப் பெற்றவருக்கு 98 ஆவதுபிறந்த நாள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி - தி.மு.க. உறவு, அரசியல் ரீதியான உறவு என்பதை எல்லாம் தாண்டியது எங்கள் இருவரது நட்பு” என்று கலைஞருடனான தனது நட்பு பற்றி சங்கரய்யா இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் நிலைத்து நிற்கிறது.

சங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு தனிச்சிறப்பு என்பது மட்டுமின்றி - நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன். அவர் நூற்றாண்டையும் கடந்து நீடூழி வாழ வேண்டும்; வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் : “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் அதிமுக கூறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>