இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்குவதற்கான தீர்மானமும், மறுசீரமைப்பு மசோதாக்களும் இன்று மக்களவையில் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி ெதாடர்பாளர் ேமார்கன் ஆர்டகஸ் கூறுகையில், ‘‘இந்தியாவின் நடவடிக்கைகளையும், அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் நிகழ்வுகளையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லையில் இரு நாடுகளும் அமைதியையும், இணக்கமான சூழலையும் காக்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கிறது’’ என்றார்.
எதிர்குரல்களை முடக்கும் பிஜேபியின் ஆதிக்கப்போக்கு; கமல் கடும் கண்டனம்